அகில இந்திய போலீஸ் அறிவியல் மாநாடு, தமிழக காவல் துறை சார்பாக சிவகங்கை SP பங்கேற்பு

Admin

சிவகங்கை : அகில இந்திய போலீஸ் அறிவியல் மாநாடு 28.11.2019 முதல் 29.11.2019 ஆம் தேதி வரை உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. அகில இந்திய அறிவியல் மாநாட்டில் தமிழக காவல் துறை சார்பாக சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் I.P.S, அவர்கள் மற்றும்  தேவகோட்டை உதவி கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் I.P.S, அவர்களும் இணைந்து குற்றம் மற்றும் குற்றவியல் இணைய அமைப்பு (CCTNS) மற்றும் […]

சிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Admin

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில், சிங்கம்புனரி காவல் நிலையம், குன்றக்குடி காவல் நிலையம் மற்றும் சிவகங்கை நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களும் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் தலைமையில் 22.11.2019 அன்று செயின் மைக்கேல் மெட்ரிகுலேஷன் ,AVM School, GHS School செஞ்சிலுவை சங்கம மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் […]

கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு DSP பாராட்டு

Admin

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அருகே பரியாமருதுபட்டியில் நடைபெற்ற கபடிபோட்டியில்வெற்றிபெற்ற ஆயுதப்படை காவலர் கபடி குழுவினரை ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.செல்வின் மற்றும் ஆய்வாளர் திரு.சீமான் அவர்கள் வெகுவாக பாராட்டினர்.    

சிவகங்கையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் வாகனங்களை கண்டறிய “டோல் ஸ்கோப்” செயலி அறிமுகம்

Admin

சிவகங்கை: தமிழகம் முழுவதும் உள்ள 26 டோல்கேட்களிள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் வாகனங்களை கண்டறியும் டோல் ஸ்கோப் செயலியை காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் தொடங்கி வைத்தார். குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக, சுங்க சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி களை, இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்ட்டுள்ள என்ற செயலியை சிவகங்கை காவல் துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சிவகங்கையில் நில தகராறில் ஈடுபட்டவர் கைது

Admin

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பழையனூர் பகுதியை சேர்ந்த மருதன் என்பவர் தன் முதலாளி மாயழகு என்பவரின் நிலத்தில் நீர்ப்பாசனம் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் விவசாய நிலத்திற்கு எதிர்பாராமல் நீர் பாய்ந்ததை கண்ட ரமேஷ் ஜாதியை பற்றி தகாத வார்த்தைகளால் கூறி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக மருதன் 04.11.2019 அன்று அளித்த புகாரின்பேரில் பழையனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

சிவகங்கையில் தகராறில் ஈடுபட்ட ஒருவர் கைது

Admin

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட C.K மங்கலம் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி தம்பதியர்களுக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக அழகர்சாமியின் மைத்துனன் முருகேசன் கேட்டதில் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் முருகேசன் தகாத வார்த்தைகளால் தாக்கி அழகர்சாமியை கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அழகர்சாமி 11.11.2019 அன்று அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் முருகேசன் மீது u/s 294(b), 341, 506(ll)IPC-ன் கீழ் […]

3 நாட்களாக பந்தேபஸ்து பணியில் ஈடுபட்டு வந்த காவலர் மரணம்

Admin

சிவகங்கை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே காவல் பணியில் ஈடுபட்டு வந்த புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (19) என்ற காவலர் தொடர்ந்து 3 நாட்களாக பந்தேபஸ்து பணியில் இருந்ததால் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சிவகங்கையில் போலி டாக்டர் கைது

Admin

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஒக்கூர் தென்றல் நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவர் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு ATAMA என்ற பெயரில் கிளினிக் நடத்தி அலோபதி சிகிச்சை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை மருத்துவ இணை இயக்குனர் ராஜமூர்த்தி, மருந்தக ஆய்வாளர் பிரபு மற்றும் குழுவினருடன் சோதனை செய்தபோது போலி சிகிச்சை அளித்த சந்திரனை பிடித்து மதகுபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக சிவகங்கை மருத்துவ […]

காவலர் வீரவணக்க நாள் 2019 : சிவகங்கை மாவட்டம்

Admin

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று காவலர் வீரவணக்க நிகழ்ச்சி மாவட்ட ஆயுதபடையில் உள்ள காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு. ஜெயகாந்தன் IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் திரு. சீமான் அவர்கள் காவலர்களை வழிநடத்தி மரியாதை […]

சிவகங்கையில் பணமோசடி செய்த இருவரை கைது செய்த குற்றபிரிவு காவல்துறையினர்

Admin

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே கீழப்பூங்குடி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து வீட்டுடன் சேர்ந்த இடத்தை அடமானமாக வைத்து அதே ஊரை சேர்ந்த பாக்கியம் என்பவரிடம் ரூபாய் 1.75 லட்சம் பணத்தை வீடு கட்டுவதற்காக கடனாக பெற்றனர். மேலும் பாக்கியம் கொடுத்த பணத்தை பலமுறை மாரிமுத்துவிடம் கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணாக கூறியும், அடமானம் வைத்த வீட்டை காலி செய்யாமலும் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து பாக்கியம் […]

error: Content is protected !!
Bitnami