சமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Admin

மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் கோட்டம், சமயநல்லூர் நெடுஞ்சாலை பிரிவு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்கள் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கிய நிகழ்ச்சி. வாடிப்பட்டி மற்றும் சமயநல்லூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கும் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரம் கொடுத்து காவல் ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  இதனைப் பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர்.   […]

திருவாரூர் காவல்துறை சார்பில் நகைகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

Admin

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் நகைகடை மற்றும் அடகுகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. கடைகளுக்கு முன் பாதுகாப்பு நலன்கருதி சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். கடைகளில் இரவு நேரங்களில் பாதுகாவலர்கள் அவசியம் நியமிக்க வேண்டும். கடை ஷட்டரில் சென்டர் லாக் அவசியம் போட வேண்டும். நகை கடைக்கு முன் தேவையில்லாமல் சுற்றி திரியும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என காவல்துறையினர்  கேட்டு கொண்டார்.

விருதுநகரில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு

Admin

விருதுநகர்: விருதுநகர் மேற்கு காவல் நிலையம் சார்பாக நடைபெற்ற சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. தியாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு பர்மா காலனி, அய்யனார் நகர், மற்றும் யானைக்குழாய் தெரு பகுதி பொதுமக்களுக்கு சாலை போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

திருப்பூர் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு

Admin

திருப்பூர்: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகர குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.பகதூர்நிஷா பேகம் அவர்கள் திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் முன்னிலையில் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு பற்றி பேசி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Admin

மதுரை: மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் அண்ணாநகர் காவல் சரக பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆட்டோ ஓட்டுநர்களினால் ஏற்படும் விபத்துக்கள் பற்றியும் அவற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய உண்மை நிலை பற்றியும் விரிவான விளக்கம் அளித்தனர். மதுரை மாநகரில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவும், சாலை விதிகளை பின்பற்றாமலும் ஒழுங்கீனமாகவும் செயல்படும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் […]

மக்கள் நலனுக்கு கம்பம் காவல்துறையினர் செய்த காரியம், பொதுமக்கள் பாராட்டு

Admin

தேனி மாவட்டம்: தேனி மாவட்டம், கம்பம் நகர் அதனை சுற்றியுள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி அவர்கள் தலைமையிலான போலீசார்களின் முயற்சியால் சாலை ஓரங்களில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் விபத்து பகுதியை இரவு நேரங்களிலும் தெரிந்துகொண்டு விபத்தை தடுக்கும் விதமாக விபத்து பகுதி, DANGER என்று பிளக்ஸ் போர்டுகள் வைத்து அதில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

திருப்பூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வழங்கிய விழிப்புணர்வு

Admin

திருப்பூர் : திருப்பூர்  குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.பஹதூர்நிஷா பேகம் அவர்கள் 30/09/2019 திருப்பூர் மாநகர் பழனியம்மாள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் கடத்தல் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தலைக்கவசம் அணிய மறவாதீர், விலை மதிப்பற்ற உயிரை இழக்காதீர்

Admin

தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் பயணம் செய்வதால் வாகன விபத்துக்களினால் ஏற்படும் தலைக்காயங்களிலிருந்து நீங்கள் 100 சதவீதம் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. தலைக்கவசம் அணியாமல் நீங்கள் பயணம் மேற்கொள்ளும்போது ஏற்படும் வாகன விபத்துக்களினால் தலைக்காயங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது. சரியான வாய்ப்புக்களை நீங்களே தேர்ந்தெடுத்து பாதுகாப்பாக சாலையில் பயணம் செய்வீர். நீங்கள் வாழும் வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் உங்கள் குடும்பத்திற்கு இறுதிவரை உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதை மனதில் நினைத்து […]

வாகனத்தை முந்தி செல்லும் போது கவனிக்க வேண்டியவை

Admin

சாலையில் தனக்கு முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச்செல்லும்போது சாலையின் வலது புறமாக மட்டுமே முந்திச்செல்ல வேண்டும். வாகனத்தை முந்திச்செல்ல நினைக்கும்போது பக்கவாட்டிலும் முன்னால் செல்லும் வாகனத்தின் முன் பகுதியிலும் போதிய இடைவெளி விட்டு பாதுகாப்பாக முந்திச்செல்ல வேண்டும். மற்ற வாகனம் உங்கள் வாகனத்தை முந்திக்கொண்டு செல்லும்போது உங்கள் வாகனத்தின் வேகத்தை முற்றிலும் குறைப்பதால் மட்டுமே வாகன விபத்துக்களிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாக்க முடியும். சாலை பாதுகாப்பு விதிகளை மதிப்பீர்…சாலை விபத்துக்களை தவிர்ப்பீர்…

திருவள்ளூர் பொன்னேரி காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு

Admin

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS உத்தரவின்படி, பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், காவல்துறையின் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண் 100 பயன்படுத்தினால் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருவார்கள் என்பதை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், பொன்னேரி காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.மகேஷ் குமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகேசன் தலைமையில் பொன்னேரி […]

Bitnami