கோவை கிரைம் செய்திகள்

Admin

நகை திருடியவர் கைது கோவை மாவட்டம் ஆறுமுககவுண்டனூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சிலை வடிவமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக கடந்த 30. 9 .2019 ஆம் தேதி திருச்சிக்கு சென்றுள்ளார். அன்று இரவு அவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளார். இது சம்பந்தமாக பேரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல் ஆய்வாளர் திரு.சுகவனம், உதவி […]

முக்கிய ஆவணங்களை தொலைத்த நபரை, தேடி ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளருக்கு நன்றி

Admin

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் ரெட்பில்டு ரோட்டில் இன்று போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் பணியில் இருக்கும்போது, வாகனத்தில் சென்ற, முகம் தெரியாத ஒருவர் நடுரோட்டில் தனது மணிபர்சை தவறவிட்டார். இதனை கண்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் மணிபர்சை எடுத்து முகவரி தேடி, (ராமநாதபுரம்) தகவல் கொடுத்து, வர சொல்லி, 2 மணிநேரத்தில் தவறவிட்ட, அதே இடத்தில் ஒப்படைத்தார். இதில் ஆதார் அடையாள அட்டை, டிரைவர் லைசென்ஸ், ஏடிஎம், […]

30 லட்சம் மதிப்பிலான பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்த கோவை காவல்துறையினர்

Admin

கோவை : தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையிலும் கோவை மாநகரில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பான்மசாலா குட்கா பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இந்த குட்கா பொருட்கள், பயன்படுத்துபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு சுவைகளிலும் தயாரிக்கப்பட்டு கவர்ச்சிகரமான பாக்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகரை பான் மசாலா குட்கா பொருட்கள் பயன்படுத்தாத நகரமாக மாற்ற […]

கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 இளைஞர்கள் கைது, 2 பேர் தலைமறைவு

Admin

கோவை : கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி, காதலருடன் நவ.26-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு சீரநாயக்கன் பாளையம் ஐஸ்வர்யா நகரில் உள்ள பூங்காவுக்கு சென்ற இருவரும்இ இரவு 9 மணியளவில் வீடு திரும்பிய போது, இருவரையும் வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல், ஆள் இல்லாத இடத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பள்ளி மாணவியின் காதலனை தாக்கி, ஆடைகளை கழற்றி செல்போன் […]

கோவையில் பட்டா வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியவர் கைது

Admin

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ராஜபாளையத்தை சேர்ந்த சந்தானலக்ஷ்மி என்பவர் பட்டா மாறுதல் செய்ய வேண்டி சிவகுமார் என்பவரை அணுகி யுள்ளார். இதற்காக ரூபாய் 60,000 வரை பெற்றுக் கொண்ட சிவகுமார், பட்டா பெறாமல் சந்தான லட்சுமியை அலைக்கழித்ததோடுமட்டுமல்லாமல், பத்திரத்தை திருப்பி கேட்டபோது, ரூபாய் 10 லட்சம் கொடுத்தால்தான், பத்திரத்தை திருப்பி தருவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக சந்தான லட்சுமி, கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில், காவல் […]

72 லட்சம் மதிப்பிலான, ஹான்ஸ் மற்றும் குட்கா பறிமுதல் செய்த கோவை காவல்துறையினருக்கு பாராட்டு

Admin

கோவை மாநகர் பள்ளி குழந்தைகளுக்கு ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதாக சமீபத்தில் கோவை காவல் ஆணையர் திரு.சுமித் சரண், IPS அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கோவை மாநகர துணைஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில், சரவணம்பட்டி சோதனைசாவடியில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா தடுப்பு நடவடிக்கையாக காவல்  ஆய்வாளர் திரு. செல்வராஜ் அவர்களுடன், தனிப்படை காவல்துறையினர் திரு.கந்தசாமி, உள்ளிட்ட குழுவினர் தீவிர […]

ஆதரவற்றநிலையில் இருந்த முதியவரை, உரியவரிடம் ஒப்படைத்த கோவை காவல்துறையினர்

Admin

கோவை: கோவை மாநகர சாயிபாபா காலணி NSR சாலையில் ஆதரவற்றநிலையில் 60 வயது மதிககத்தக்க தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் பொன்ராஜ் – என்பவரை சாயிபாபா காலனி உதவி ஆய்வாளர் திரு.V.தனசேகரன் அவர்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வேண்டி R.S. புரம் மாநகராட்சி இரவு தங்கும் மையத்தில் ஒப்படைப்பு செய்யப்பட்டார். மையத்தில் முதியவருக்கு வக்கீல் Lion. மா.மதிவாணன் M.A.B.L அவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதன் மூலம் முதியவர் பொன்ராஜ் சென்னை […]

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த கோவை காவல்துறையினர்

Admin

கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கொண்டயம்பாளையம், லட்சுமி கார்டன் பகுதியில் ,மீனாட்சிசுந்தரம் என்பவரின் வீட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு, பழனியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வீட்டில் நுழைந்து மீனாட்சிசுந்தரம் மற்றும் அவரது மனைவி சியாமளா ஆகிய இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு சியாமளா கழுத்திலிருந்த ஒன்றைக் சவரன் நகையை பறித்துச் சென்றார். இச்சம்பவத்தில் சியாமளா என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட,  கொலை குற்றவாளிக்கு […]

கோவையில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர், ‘போக்சோ’ சட்டத்தில் கைது

Admin

கோவை: கோவை, காந்திபுரம், ஐந்தாவது வீதி விரிவாக்கம் பகுதியில், ‘புனித மரியன்னை’ அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ராமநாதபுரம், புலியகுளத்தை சேர்ந்த மரிய ஆண்டனி ராஜ், 55 என்பவர் தாளாளராக உள்ளார். நேற்று முன்தினம்(நவ.,20) பள்ளியில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் ஐந்து மாணவிகளை அழைத்த தாளாளர், தனது மொபைல்போனில் சில, ‘ஆப்’களை பதிவிறக்கம் செய்து […]

பணியின் போது கொலை செய்யப்பட்ட காவலரின் வாரிசுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பணி, கோவை ஆணையர் வழங்கினார்.

Admin

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி பணியில்ஈடுபட்டிருந்தார். அப்போது 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய செல்வராஜ் அபராதம் விதித்தார்.இதையடுத்து அவருக்கும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த 3 வாலிபர்களும் பெரும் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்தனர். காவலர் செல்வராஜைநடுரோட்டிலேயே […]

error: Content is protected !!
Bitnami