காவலர் வீர வணக்க நாள் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மரியாதை

Admin

தூத்துக்குடி: தூத்துக்குடி காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இன்று தென்பாகம் காவல் நிலையத்தில் வீரவணக்கம் செலுத்தும் வகையில் சிறப்பு கவாத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் நடைபெற்றது. இதில் உயிரிழந்த காவல்துறையினர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 21 காவலர்கள் மூன்று முறை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்களது மரியாதை செலுத்தினர் பின்னர் காவல்துறை […]

காவலர் வீரவணக்க தினத்தில் காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் செய்த காரியம்

Admin

காவலர் வீரவணக்க தினத்தை முன்னிட்டு இரண்டு பெரிய அதிகாரிகளான காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி, IPS மற்றும் சென்னை காவல் ஆணையர் திரு.A. K. விஸ்வநாதன்,IPS ஆகியோர் செய்த காரியம் காவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் அளிப்பவர்களுக்கு உண்மையான அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாது, அதனையும் கடந்தது அந்த குடும்பத்தினரை சந்தித்து உங்கள் பக்கம் நாங்கள் இருக்கிறோம் என ஆதரவை மனோ ரீதியாக அந்த குடும்பத்துக்கு அளிப்பது என்பது உயரிய […]

காவலர் வீரவணக்க நாள்-2019 : திருவண்ணாமலை மாவட்டம்

Admin

திருவண்ணாமலை: பணியில் இருக்கும் போது உயிர்நீத்த காவலர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. திங்களன்று திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் மினி மாரத்தான் போட்டி துவங்கியது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் போட்டியை துவக்கி வைத்தார். தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிர் இழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கப்பட்டது.   […]

திருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி

Admin

திருப்பூர்:  எப்படி வாழவேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுப்பதில் மூத்தவர்கள், இந்தச் சமூகத்திற்காகவும், மக்கள் சேவைக்காகவும் தன்னுயிர் நீத்தவர்கள்…. முன்னோடியாய் வாழ்ந்து காட்டியவர்களுக்கு மராத்தான் மூலம் முன்”ஓடி ” ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் விதமாக திருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் கனத்த இதயத்துடன் நினைவேந்தல் கவாத்தும், மாறாத நினைவு களை சுமந்தபடி, மாரத்தான் ஓட்டமும் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி

Admin

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். வெயில், பணி, மழை பாராது பணிபுரிந்த காவலர்கள் தம்பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவஞ்சலி காலை 8 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சிலம்பரசன் அவர்கள் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.   […]

காவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்

Admin

மதுரை: கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படையினர் 10 பேர் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த இந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலல் ஆண்டுதோறும் பணியின்போது உயிர் நீர்த்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், காவலர் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் […]

காவலர் வீரவணக்க நாள்-2019 : வேலூர் மாவட்டம்

Admin

வேலூர் : பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு இன்று (21.10.2019) வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் வேலூர் சரக காவல் துணைத் தலைவர் திருமதி காமினி இ.கா.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு விஜயகுமார் அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள். […]

காவலர் வீரவணக்க நாள் 2019 : திண்டுக்கல் மாவட்டம்

Admin

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில் அக்டோபர் 21- ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையில் வீரமரணம் அடையும் காவலர்களை நினைவுகூறும் விதமாக திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் வீரமரணமடைந்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் […]

காவலர் வீரவணக்க நாள் 2019 : சிவகங்கை மாவட்டம்

Admin

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று காவலர் வீரவணக்க நிகழ்ச்சி மாவட்ட ஆயுதபடையில் உள்ள காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு. ஜெயகாந்தன் IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் திரு. சீமான் அவர்கள் காவலர்களை வழிநடத்தி மரியாதை […]

இராமநாதபுரத்தில் காவலர்களுக்கு நீர்த்தார் நினைவு தினம்

Samson

இராமநாதபுரம் 21.10.2019-ம் தேதிஆயுதப்படை வளாகம் மற்றும் கமுதி தனி ஆயுதப்படை மைதானத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக, காவல் பணியின்போது வீரமரணம் அடைந்தவர்களுக்கு நீர்த்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. திரு.ரூபேஷ் குமார் மீணா, இ.கா.ப., காவல்துறை துணைத் தலைவர், இராமநாதபுரம் சரகம் அவர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தில் பணியின்போது உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்கள். திரு.வீர ராகவா ராவ், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர், இராமநாதபுரம் மற்றும் […]

error: Content is protected !!
Bitnami