தமிழகத்தில் முதல் முறையாக LED சிக்னல், கடலூரில் தொடங்கப்பட்டது

Admin

கடலூர்:  கடலூர் சீமாட்டி சிக்னல் பாயிண்டில் நவீன டிஜிட்டல் போக்குவரத்து சிக்னலை 16.10.2019 தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.ஸ்ரீ அபிநவ் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்தார். இது தமிழகத்தில் முதன்முதலாக Digittal LED Lights மூலம் Digital தொழில் நுட்பத்தில் நில் (Stop), கவனி (Alert), செல் (go) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் படித்து தெரிந்துகொள்ளும்படி வடிவடிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிக்னல்களில் உள்ள குறியீடுகள் நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் […]

தற்கொலைக்கு முயன்ற நபரை, சாமர்தியமாக மீட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

Admin

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன் ஷிப் வட்டத்தில் உள்ள மணிகண்டன் என்பவர் கழுத்தில் நாட்டு சணல் வெடியை சுற்றிக்கொண்டுஇ தனது மாமியார் வீட்டின் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, மனைவியை தன்னிடம் அனுப்பி வைக்க கோரி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைக் கண்ட மாமியார் கூச்சலிடவே அவ்வழியாக வந்த நெய்வேலி நகர முதன்மை காவலர் பாலச்சந்திரன் அவரிடம் கூறவே, வீட்டினுள் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை […]

சமூக வலைதளத்தில் தவறான தகவல்: 2 பேர் தற்கொலை

Admin

கடலூர்: கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே மாணவி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் தவறான தகவலை பதிவிட்ட பிரேம்குமாரை கைதுசெய்ய 4 தனிப்படைகள் அமைத்து கடலூர் காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

மக்களுக்கு நன்மை கிடைக்கும்னா எந்த லெவலுக்கும் இறங்கி வேலை பார்ப்போம்! -அசத்தும் அம்பேத்கர்!

Admin

கடலூர்:  ‘மக்களுக்கு நன்மை கிடைக்கும்னா எந்த லெவலுக்கும் இறங்கி வேலை பார்ப்போம்!’ -ஆய்வாளர் அம்பேத்கர் அடிக்கடி இப்படி சொல்வார். பேச்சில் மட்டுமல்ல, நற்செயலிலும் அவர் முனைப்புடன் இறங்குவதால், பொது மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருக்கிறார். யார் இந்த அம்பேத்கர்? அப்படி என்ன செய்துவிட்டார்? 15 நாட்களுக்கு முன்புதான் சிதம்பரத்திலிருந்து வடலூருக்கு காவல்நிலைய ஆய்வாளராக மாறுதலாகிச் சென்றார். சில நாட்களுக்கு முன், வடலூர் நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்குச் சென்ற அவர், இருசக்கர வாகனம் […]

இரயிலில் தவறவிட்ட பணப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு

Admin

விருத்தாசலம்: விருத்தாசலம் இருப்புப்பாதை காவலர் திரு.கண்ணதாசன் அவர்கள் 03.01.2019-ம் தேதியன்று அனந்தபுரி விரைவு இரயிலில் இரவு பணி மேற்கொள்ளும் போது கேட்பாரற்று கிடந்த பணப்பையை எடுத்து பார்த்ததில் சுமார் 1.5 லட்சம் மதிப்புள்ள 5 சவரன் தங்க நகை இருப்பதை கண்டார். உடனே பயணிகளிடம் பை யாருடையது என விசாரித்ததில் கன்னியாகுமரியை சேர்ந்த திருமதி.மரியசெல்வி என்பவருடையது என தெரியவந்ததையடுத்து விருத்தாசலம் இரயில் நிலையம் வந்ததும் மரியசெல்வியிடம் செயின் ஒப்படைக்கப்பட்டது. இத்தகவலை அறிந்த […]

கடலூர் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு, 16 பேருக்கு கடுமையான தண்டனை?

Admin

கடலூர்: கடலூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 2 பேர் காணவில்லை என பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர்களின் புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், இரு மாணவிகளையும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி கண்டுபிடித்து மீட்டனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் மாணவிகள் இருவரையும், திட்டக்குடி […]

பண்ருட்டி பகுதியில் தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

Admin

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் தொடர்ந்து 7 இரு சக்கர வாகனத்தை திருடிய கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பண்ருட்டி புதுப்பேட்டை பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(58) இவரது இருசக்கர வாகனம் நேற்றுமுன்தினம் 3 ம்தேதி வ.உ.சி. தெருவில் நிறுத்திவிட்டு சென்ற போது திருடுபோனது. இதுபோல் திருவதிகை வால்கார தெருவை சேர்ந்த செந்தில்(30) இவரது இருசக்கர வாகனம், பண்ருட்டி லட்சுமிபதி நகரை சேர்ந்த கணேசன்(57) என்பவரது இருசக்கர வாகனமும், போலீஸ்லைன் […]

கடலூர் மாவட்ட காவல்துறை வாட்ஸ் ஆப் அறிமுகம்

Admin

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் ஏதேனும் நிகழ்ந்தால் அது சம்பந்தமாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டி வாட்ஸ்அப் எண் 9087300100 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் அறிமுகபடுத்தினார். பொதுமக்கள் இந்த வாட்சப் எண்ணை பயன்படுத்தி குற்ற தகவல், போட்டோ அல்லது வீடியோ அனுப்பினால் மாவட்ட காவல்துறை மூலம் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடலூரில் காவல்துறை சார்பில் புதிய நூலகம் திறப்பு

Admin

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பார்வையாளர்கள் அறையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்திக்க வரும் பார்வையாளர்கள் படித்துப் பயன்பெறும் வகையில் சிறிய நூலகம் ஒன்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப அவர்கள்  துவக்கி வைத்தார்.இந்நூலகத்தில் பயனுள்ள பல புத்தகங்கள் உள்ளது என காவல்துறை சார்பில் தெரிவித்தனர்.

சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டிய புது மணமகன் மற்றும் மணப்பெண்ணை பாராட்டி பரிசு வழங்கிய காவல்துறையினர்

Admin

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் தலைகவசம் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வரும் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கி வந்தனர். இந்நிலையில் 11.11.2018-ம் தேதியன்று கடலூர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு.சதீஸ்குமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் […]

error: Content is protected !!
Bitnami