சாலையை சீரமைத்த சென்னை போக்குவரத்து காவலர்கள்

Admin

சென்னை: சென்னை, தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் கீழ் சாலை குண்டும் குழியுமாக இருந்ததை சீர்அமைக்கும் பணியில் போக்குவரத்து காவலர்கள் சரிசெய்தனர். அப்பகுதிகளில் அடிக்கடி வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள் ஏற்படுவதால், அதனை போக்குவரத்து காவலர்கள் சீரமைத்தனர். காவல் உதவி ஆய்வாளர் திரு.குமார், தலைமைக்காவலர் திரு.சண்முகம், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பூபால் மற்றும் காவலர்கள் சிறப்பான பணிக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மனமார்ந்த வாழ்த்துகள்.

தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, DC முத்துசாமி தலைமையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது

Admin

சென்னை: ஜனநாயகத்தை கட்டிக் காப்பதில் முக்கிய பங்காற்றிடும் பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத் துறையின் பணிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் நாள் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. தேசிய பத்திரிகையாளர் தினம் என்பது ஊடக சுதந்திரம் மற்றும் தன்னிச்சையான தைரியத்துடன் இயங்கும் இதழியல் துறையின் செயல்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் நாளாக 1996 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 16 ஆம் நாள் இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரஸ் கவுன்சில் […]

சிவகங்கையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் வாகனங்களை கண்டறிய “டோல் ஸ்கோப்” செயலி அறிமுகம்

Admin

சிவகங்கை: தமிழகம் முழுவதும் உள்ள 26 டோல்கேட்களிள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் வாகனங்களை கண்டறியும் டோல் ஸ்கோப் செயலியை காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் தொடங்கி வைத்தார். குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக, சுங்க சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி களை, இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்ட்டுள்ள என்ற செயலியை சிவகங்கை காவல் துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

திருநெல்வேலி மாநகர காவல்துறை SKOCH காவல் விருது பெற வாக்களிக்க வேண்டுகிறோம்

Admin

திருநெல்வேலி: ‘ஸ்கோச்’ விருதுகள் ஆண்டுதோறும் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்படுகிறது. அரசின் துறைகளின் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுகிறது. மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் சிறந்த மேலாண்மைச் செயல்பாட்டிற்கான ‘ஸ்கோச்’ விருதுகளை கடந்த ஆண்டு சென்னை சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை பெற்றனர். டெல்லியில் உள்ள SKOCH நிறுவனத்தின் சார்பில் 2019 […]

குற்றவாளியை தண்டிப்பது மட்டுமல்ல காவல் பணி, வழிகாட்டுவதே மேன்மையான பணி, நிருபித்துகாட்டிய காவல் உதவி ஆணையர் சேகர்

Admin

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சாம்பவர்வடகரை காவல் நிலையத்திற்குட்பட்ட, ஊர்மேல்அழகியான் கிராமத்தை சேர்ந்த, முருகன் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தது. இதனை தொடர்ந்து காவல்துறை அவரை தொடர்ந்து, கண்காணித்து வந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு முன் தலைமறைவானார் முருகன். ஆனால், 1999-ஆம் ஆண்டு இடைக்கால் என்ற ஊரில் முருகனை கண்டார் அப்போதைய சாம்பவர்வடகரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சேகர் அவர்கள். விசாரணையில், முருகன் எந்த குற்ற செயலிலும் ஈடுபடவில்லை […]

சட்ட ஒழுங்கு பிரச்சனை புகார்களை தெரிவிக்க “ஹலோ புதுக்கோட்டை போலீஸ்” அறிமுகம்

Admin

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருட்டு, கொலை, கொள்ளை வழிப்பறி, அடிதடி விபத்துகள், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள், பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்கள், பொது இடங்களில் மதுஅருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் போன்ற அனைத்து புகார்களை தெரிவிக்க ஹலோ போலீஸ் (Hello Police 7293911100) என்ற அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்திகுமார் இ.கா.ப அவர்கள் புதிய சேவையை அறிமுகம் […]

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, வெள்ளவேடு காவல்ஆய்வாளர் விழிப்புணர்வு

Admin

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில், வெள்ளவேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் தலைமையில், சாலை பாதுகாப்பு குறித்தவிழிப்புணர்வு, இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும், வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் சரியாக வைத்திருக்க வேண்டும், தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு புதிய ஹெல்மெட் வழங்கி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.   திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள் திரு. J. மில்டன் […]

நுண்ணறிவு பிரிவு தலைமை காவலருக்கு நெல்லை காவல் ஆணையர் பாராட்டு

Admin

நெல்லை: நெல்லை மாநகரம் பேட்டை காவல் நிலைய பகுதிகளில், குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உரிய நேரத்தில் ரகசிய அறிக்கை சமர்ப்பித்து, குற்றம் நடக்காமல் தடுக்க சிறப்பாக பணியாற்றிய நுண்ணறிவுப்பிரிவு தலைமைக்காவலர் (1608) திரு.பழனி முருகன் அவர்களை 14-11-2019-ம் தேதியன்று, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் (இ.கா.ப) அவர்கள்,வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.   திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.ஜோசப் அருண் குமார்

இராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனையாளர்கள் 3 பேர் கைது

Admin

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை மற்றும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு (பரமக்குடி நகர் காவல் நிலையம்) திருமதி.அமுதா அவர்கள் தலைமையிலான போலீசாருக்கு 14.11.2019-ம் தேதி  கிடைத்த தகவலின் அடிப்படையில் கஞ்சா வைத்திருந்த 03 பேரை NDPS ACT-ன் பிரகாரம் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து 1.1 கிலோகிராம் கஞ்சாவையும் கைப்பற்றினர். மேற்படி எதிரிகள் குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்கள் முன்னர் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற […]

காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு, நாகப்பட்டினம் SP அழைப்பு

Admin

நாகப்பட்டினம்:  நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு முன்வர வேண்டும் எனவும் மேலும் உட்கோட்டம் ,காவல் நிலையம், மற்றும் ஆயுதப்படை வளாகம் என அனைத்து வளாகங்களிலும் மரக்கன்றுகள் நடவேண்டும் என மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS ., அவர்கள் மரக்கன்று நடுவதை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் அலுவலகத்தில் முதல் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார்கள் பின்னர் […]

error: Content is protected !!
Bitnami