காசிமேடு மக்களின் மனதை கவர்ந்த மக்கள் ஆய்வாளர், சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்

Admin

சென்னை : காவல்நிலையங்களால் அலைக்கழிக்கப்படும் எளிய மனிதர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். `இந்த இன்ஸ்பெக்டர் சரியில்லை, உடனே இடமாற்றம் செய்யுங்கள்’ எனப் போராடிய மக்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால், `காசிமேடு காவல் ஆய்வாளர் திரு.சிதம்பரமுருகேசனை இடமாற்றம் செய்யக்கூடாது’ என அப்பகுதி பெண்கள் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை காசிமேடு காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியிட மாறுதலை ஏற்க […]

மதுரையில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

Admin

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் வார்டு பொறுப்பு அலுவலர்களாக 100 காவல் உதவி ஆய்வாளர்களை நியமித்து ஒவ்வொரு வார்டிலும் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடத்தி பொதுமக்களின் தேவைகள் மற்றும் குறைகளை கண்டறிந்து உடனடியாக அவற்றிற்கு தீர்வு காணும்படி அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறை வழங்கினார். அதன் அடிப்படையில் விளக்குத்தூண் காவல் ஆய்வாளர் திருமதி.லோகேஸ்வரி […]

டெங்கு கொசுவை ஒழிப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு

Admin

மதுரை: மதுரை மாநகர காவல்துறை பொதுமக்கள் அனைவரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு டெங்கு கொசுவை ஒழிப்பதற்காகவும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்காகவும் மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியைமேற்கொண்டனர்.   மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்       T.C.குமரன்          T.N.ஹரிஹரன் மதுரை                  மதுரை

அரும்பாக்கம் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு

Admin

சென்னை: 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த அரும்பாக்கம் சிறார் மன்ற (Police Boys & Girls Club) மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார். அண்ணாநகர் மாவட்டம், அரும்பாக்கம் காவல் நிலைய எல்லையில் காவல் சிறார் மன்றம் (Police Boys & Girls Club) இயங்கி வருகிறது. சிறார் மன்றத்தில் உள்ள 10ம் வகுப்பு […]

சிறப்பாக பணியாற்றி வழிப்பறி செய்தவர்களை பிடித்த காவலர்களுக்கு காஞ்சிபுரம் SP பாராட்டு

Admin

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம்,  தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம் பகுதியில் தனது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த செந்தில்குமார் என்பவரை மர்ம நபர்கள் இருவர் வழி கேட்பது போல் நடித்து அவரை தாக்கி அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தாழம்பூர் காவல் நிலைய போலீசார் குற்றவாளிகளை குறித்த அடையாளங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டு, அப்பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு தகவல் […]

அயோத்தி தீர்ப்பு பாதுகாப்பு: சென்னை சபாஷ் காவல் துறை! கிரேட் சல்யூட் !

Admin

சென்னை: அயோத்தி வழக்கு தீர்ப்பு வந்த நிலையில் எந்த ஒரு அசம்பாவித நிகழ்வுகளும் நடைபெறவில்லை, இதுவரை அமைதியான சூழ்நிலை நிகழ்ந்து வருகிறது. இதற்கு காரணமான நம் தமிழக காவல்துறைக்கு பொது மக்களாகிய நாம் நன்றி கூறவேண்டும். அயோத்திய தீர்ப்பு இன்று வெளிவருவதை முன்னிட்டு காவல் துறை உடனடனடியாக நேற்று இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை காவல் துறை கூடுதல் கமிஷனர், துணை கமிஷனர் ஆகியோருடன் சென்னை […]

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

Admin

காஞ்சிபுரம் : அயோத்தி தீர்ப்பு வருவதை ஒட்டி எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சுற்றுலாத்தலமான காஞ்சிபுரம் பகுதிகளில் காமாட்சி அம்மன் கோவில் வரதராஜ பெருமாள் கோவில் ஏகாம்பரநாதர் கோவில் ரயில்வே நிலையம் சுற்றுலாத்தலங்கள் முக்கிய பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் 10 டிஎஸ்பி 2000 போலீசார் மற்றும் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயரத்தை அதிகரிக்க இளைஞர் செய்த செயலால், தேர்வு மைதானத்தில் இருந்து வெளியேற்றம்

Admin

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவல் துறை அதிகாரிகளுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வானது கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக 400க்கும் மேற்பட்டவர்கள் சேலம் மாவட்டத்திற்கு சென்றிருந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை என்னும் இடத்தை சேர்ந்த தயாநிதி என்ற ஒரு இளைஞரும் இந்தத் தேர்வில் பங்கேற்று இருந்தார். தயாநிதிக்கு உயரம் அளவிடும் தேர்வு நடை பெற்றபோது […]

திருச்சி ரயில்வே காவல்துறை புதிய எஸ்பியாக Dr. T. செந்தில்குமார் பதவியேற்பு

Admin

திருச்சி : திருச்சி ரயில்வே எஸ்பியாக பொறுப்பேற்ற உயர்திரு . Dr. T. செந்தில்குமார்  அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். 2003 ஆம் ஆண்டு காவல் துணை கண்காணிப்பாளராக தேர்ச்சி பெற்ற திரு. செந்தில்குமார் அவர்கள் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் டிஎஸ்பியாக பணியாற்றியுள்ளார். சென்னையில் உள்ள பிளவர் பஜாரில் துணை ஆணையராகவும், தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2013 ல் ஆந்திராவின் புட்டூரில் நடந்த […]

மாணவர்களை நல்வழிப்படுத்த பாளைங்கோட்டை ஆய்வாளரின் நூதன முயற்சி

Admin

திருநெல்வேலி: நெல்லையில் இரு பள்ளி மாணவர்கள் மோதல், விசாரணைக்கு அழைத்து வந்த 45 மாணவர்களை 1330 திருக்குறள் எழுதிவிட்டு செல்லுமாறு பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் தில்லைநாகராஜன் உத்தரவு  பிறப்பித்துள்ளது சமூக வலைதளங்களில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளுக்கு பிறகு நெல்லையில் புகழ்பெற்ற இரு பள்ளி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர் . மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் […]

Bitnami