தமிழ்நாடு காவல்துறை பற்றி..

இந்தியாவின் மிகப் பெரிய காவல்துறையில் தமிழக காவல்துறையும் ஒன்று. தேசிய அளவில் தமிழக காவல்துறை 5வது இடத்தில் உள்ளது.

டிஜிபி தலைமையில் இயங்கி வரும் தமிழக காவல்துறை 1 லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டர் பரப்பிலான மக்களைக் கொண்ட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குற்றத் தடுப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. இது மட்டுமல்லாது 1076 கிலோமீட்டர் கொண்ட தமிழக கடலோரப் பகுதியின் பாதுகாப்பையும் தமிழக காவல்துறை கவனித்து வருகிறது.

வடக்கு மத்தி, மேற்கு, தெற்கு என தமிழக காவல்துறை 4 மண்டலங்களாகவும்  பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலமும் ஜஜியின் தலைமையில் இயங்கி வருகிறது. இது தவிர சென்னை, சென்னை புறநகர் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 7 மாநகரங்களும் ஆணையர் தலைமையில் இயங்கி வருகிறது.

தமிழகத்தில் 30 காவல் மாவட்டங்கள் உள்ளன. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இவை இயங்கி வருகின்றன. சிவில் போலீஸ் தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயுதப் போலீஸாரும் உள்ளனர்.

மாநிலத்தில் ஒரு ரயில்வே சரகம் உள்பட மொத்தம் 12 காவல் சரகங்கள் உள்ளன. ஒவ்வொரு சரகத்திலும் 2 முதல் 3 மாவட்டங்கள் உள்ளன. சில சரகங்களில் இவை கூடுதலாக இருக்கும்.

தமிழக காவல்துறையின் பணியை எளிமையாகவும் சிறப்பாக்கும் வகையிலும் பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டு சீரிய முறையில் அவை செயல்பட்டு வருகின்றன. அவை

 • ஆயுதப் போலீஸ் அல்லது தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் ஹோம் கார்ட் மற்றும் சிவில் பாதுகாப்பு
 • சிவில் சப்ளைஸ் சிஐடி
 • கடலோர பாதுகாப்புப் படை
 • சிபிசிஐடி
 • பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு
 • தமிழ்நாடு கமாண்டோ படை
 • மதுவிலக்கு தடுப்புப்பிரிவு
 • ரயில்வே போலீஸ்
 • சமூக நீதி மற்றும் மனித உரிமைப்பிரிவு
 • சிறப்பு காவல் சிஐடி
 • தொழில்நுட்பப் பிரிவு

 

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452