15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம்

Admin

சென்னை: சென்னையில் 15,621 காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று தேர்வானவர்களுக்கான பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர் தமிழக காவல்துறையில் மூன்றில் ஒருபங்கு பெண் காவலர்கள் உள்ளதாக கூறினார். தேசிய ஒருமைப்பாட்டை பேணிக்காத்து, நாட்டின் ஒற்றுமைக்காகவும், தீவிரவாதம் தலைதூக்காமலும் காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக காவல்துறையினரை வெகுவாக பாராட்டினார்.

மேலும் பேசிய அவர் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக, தமிழக காவல்துறை செயல்பட்டு வருவதாக பெருமையுடன் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் நாட்டிலேயே முதல்முறையாக திருநங்கைகளுக்கு காவல்துறையில் பதவி வழங்கியது தமிழகம் தான் என்றார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்திருப்பதாக தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

வேப்பேரியில் மணல் கடத்தல் டிரைவர்கள் தப்பித்து ஓட்டம்

67 கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் தாசில்தார் ரத்தினாவதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவத்தன்று மாலை வேப்பூர் கூட்டுரோடு விருத்தாசலம்-சேலம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள கள்ளிப்பாடி ஆற்றிலிருந்து அனுமதி இல்லாமல் மணல் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்ற லாரியை மடக்கி சோதனை செய்ய முயன்றனர். அப்போது லாரி ஓட்டுனர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடியதால் பின்னால் வந்த மற்ற மூன்று லாரிகளின் டிரைவர்களும் […]

மேலும் செய்திகள்

Bitnami