கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Admin

கடலூர்: புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கூடப்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருடைய மகன் அன்பு என்கிற அன்பரசன் (24) கடந்த 5–ந் தேதி அன்பரசன் உள்பட 6 பேர் சேர்ந்து புதுச்சேரி அமைச்சர் கந்தசாமியின் உதவியாளராக இருந்த வீரப்பனை கொலை செய்தனர். இது தொடர்பாக அன்பரசன் உள்பட 6 பேரும் ரெட்டிச்சாவடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் அன்பரசன் மீது வில்லியனூர் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை தொடர்பாக 7 வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் அன்பரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அன்பரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளர் திரு.குமாரபாலன், அன்பரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் காவல்துறையினர் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பூட்டை உடைத்து பணம் திருட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் காவல்துறையினர் விசாரணை

63 கடலூர்: பண்ருட்டி–சென்னை சாலையில் தனியார் ஆயில் மில் ஒன்று உள்ளது. இங்கிருந்து கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் என்று அனைத்து வகையான எண்ணையும் மொத்தமாகவும், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452