5 பேருக்கு சிறை!

admin1

கோவை  :  கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ஜி.பி.சிக்னல் அருகே எல்லன் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனரான ராமச்சந்திரன் (75),  என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர் என்பவருக்கு வாடகையாக கொடுத்தார். இதையடுத்து இந்த  சென்னை மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த மருத்துவமனைக்குள்,  சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன் பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். இது குறித்து ரத்தினபுரி காவல் துறையினர்,  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் தனக்கு ரூ.4 கோடியே 95 லட்சம் வாடகை கொடுக்கவில்லை,  என்றும், ரூ.100 கோடி சொத்துக்களை டாக்டர் உமாசங்கர், மேலாளர் மருதவான் ஆகியோர் அபகரிக்க முயற்சி செய்வதாகவும் டாக்டர் ராமச்சந்திரன் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையில்,  புகார் செய்தார். இதையடுத்து காவல் துறையினர்,     2 பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில்,  ஜாமீனில் வெளியே வந்த டாக்டர் உமாசங்கர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவலுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர காவல் துறையினர், விசாரணை நடத்தினார்கள். அதில் மருத்துவமனை, நிர்வாக இயக்குனரான டாக்டர் ராமச்சந்திரன்தான், மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல்,  நடத்த காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர்,  டாக்டர்கள் ராமச்சந்திரன், காமராஜ் மற்றும் மூர்த்தி, முருகேசன், டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை செய்தது நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து காவல் துறையினர்,  5 பேரையும் கோவையில் உள்ள தலைமை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து நீதிபதி சஞ்செய் பாஸ்கர், டாக்டர்கள் 2 பேர் உள்பட 5 பேரையும் வருகிற 4-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து காவல் துறையினர்,  5 பேரையும் பலத்த பாதுகாப்புடன்,  அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில்,  அடைத்தனர்.

 

 

 

கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சொத்து தகராறில், தந்தையை அடித்த மகன் கைது!

553 ஈரோடு :   ஈரோடு புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கண்டிசாலை பகுதியை சேர்ந்தவர் பொங்கியான் (70),  இவருடைய மகன் நாகராஜ். இன்னும் திருமணம் ஆகாதவர். பொங்கியானுக்கு ஒரு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452