மதுரையில் இருவர் தற்கொலை, காவல்துறையினர் விசாரணை

Admin
0 0
Read Time2 Minute, 12 Second

மதுரை:  கால் வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லாபுரம் வேலுப்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி 80. இவர் கடந்த சில தினங்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வலி தாங்கமுடியாமல் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது மகள் நளினி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உத்தங்குடியில் மூளைக்கட்டி நோயால் அவதிப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை

மதுரை மே 3 மூளைக்கட்டி நோயால் அவதிப்பட்டபெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தங்குடி மங்கல குடியைச் சேர்ந்தவர் வேலுமணி 52 .இவர் மூளைகட்டி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார் .இதனால் மனமுடைந்து காணப்பட்ட வேலுமணி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது கணவர் சின்னசாமி கே .புதூர்போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கைகளை சுத்தப்படுத்த காவல்துறை அறிவுறுத்தல்

481 மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜுத்குமார்.IPS., அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami