திருவையாறு” 4 வாலிபர்கள் கைது

Prakash
0 0
Read Time2 Minute, 2 Second

திருவையாறு: வீரசிங்கம்பேட்டை மேலத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(55) இவர் கடந்த 27-ம் தேதி தஞ்சையிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீரசிங்கம்பேட்டைக்கு வந்துகொண்டிருந்தார்.  2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கிருஷ்ணமூர்த்தி செல்போனை பறித்து சென்றுவிட்டனர். இது சம்மந்தமாக நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். புகாரின்பேரில் நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோஸ்பின்சிசாரா, ஜம்புலிங்கம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.  4 பேர் சந்தேகத்தின்பேரில் நிற்பதாக வந்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று 4 பேரை பிடித்து விசாரித்ததில் கண்டியூர் காளியம்மன் கோவில் தெரு சரவணன் மகன் சந்தோஷ் (20), திருவையாறு பங்களா தெரு சேகர் மகன் மணிமாறன்(19), கண்டியூர் ஐய்யனார்கோவில் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் சூர்யா(20), மேலத்திருந்பூந்துருத்தி காளியம்மன்கோவில் தெரு மகேந்திரன் மகன் பாலமுருகன்(21) என்பதும் இவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபடுவதும் தெரியவந்தது, அவர்களிடமிருந்து 13 செல்போன், 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். வழக்கு பதிவு செய்தனர். மேலும் 4 பேரையும் கைது செய்து திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

IPS., அவர்கள் திறந்து வைத்தார்

255   திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையத்தை திருநெல்வேலி மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami