சோதனைச்சாவடி திறப்பு- டிஐஜி முத்துசாமி

Prakash
0 0
Read Time1 Minute, 38 Second
திண்டுக்கல்:  திண்டுக்கல் அருகே விருவீட்டில் போலீசார் சோதனை சாவடியை டிஐஜி முத்துசாமி திறந்துவைத்தார். அப்போது அவர் கூறியதாவது: போலீசார் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். பகலிலேயே நம் கண்ணில் மண்ணை தூவி விட்டு சமூகவிரோதிகள் தப்பிச் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த பகுதியில் சோதனைச்சாவடி அமைப்பதால் பிற மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு சமூகவிரோதிகள் வருவது தடுக்கப்படும். திண்டுக்கல் மாவட்டம் மலைகளால் சூழப்பட்டு உள்ளதால் பல தகாத செயல்களைச் செய்து இங்கு அரங்கேற்ற வாய்ப்பு உள்ளது. சுற்றுலா பயணிகள் போர்வையில் சமூக விரோதிகள் நுழையக்கூடாது. போலீசார் மிகவும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். நமது சேவை மக்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும். சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார் .பின்பு போலீசாருடன் சேர்ந்து மூலிகை தேனீர் அருந்தினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா
Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாகனங்களை திருப்பி அனுப்பிய போலீசார்

288 தேனி:  தற்போது கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்ட பகுதிகளில் கரோனா தொற்று அதிக அளவு பரவி வருகிறது இது தொடர்பாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami