உடலில் ஆக்சிஜன் அளவை எவ்வாறு பேணலாம்?

Admin
0 0
Read Time3 Minute, 28 Second
நம் உடலில் இரத்ததோடு ஆக்சிஜன் கலந்திருக்கும். இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சரியான அளவில் இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் திகழ முடியும்.
அதாவது இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 75ல் இருந்து 100 வரை இருக்க வேண்டும். அதை விட குறையும் பொழுது தான் தலைவலி, மூச்சு திணறல், தொடர் இருமல், ஆஸ்துமா,நுரையீரல் பாதிப்புக்கள் அனைத்தும் தோன்றும். இதனாலேயே தான் இன்று அதிகளவு மரணங்கள் சம்பவிக்கின்றன.
ஆக்சிஜன் குறைப்பாட்டை எவ்வாறு சரி செய்யலாம்???
பொதுவாக சமைக்காது உண்ண கூடிய உணவுகளில் ஆக்சிஜன் அளவை அதிகமாக்க கூடிய கனிமங்கள் நிறைய உள்ளன.
 • தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு கலந்து வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும். சீனி கலக்க கூடாது.
 • ஏதாவது பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டும்.
 • பச்சை தேங்காய், ஊற வைத்த வேர்க்கடலை உண்ணுவது மிக நல்லது
 • பீட்ரூட், கேரட் ஜூஸ் லெமன் கலந்து அருந்தலாம்.
 • பச்சை தக்காளியை கல் உப்பு நீரில் ஊற வைத்து பின் கழுவி தினமும் உண்ணலாம்.
 • பல்வேறு இரசாயனம் கலந்துள்ள மைதா, தூள் உப்பு, வெள்ளை சீனி, இறக்குமதி எண்ணெய்கள், பதப்படுத்திய உணவுகள் போன்றவற்றை அறவே ஒதுக்க வேண்டும்.
 • கடையில் விற்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
 • பழைய உணவுகளை உண்ணல் ஆகாது. இதில் பல நாட்கள் வைத்திருக்கும் இட்லி மாவும் உள்ளடங்கும்.
 • தினமும் மூச்சி பயிற்சி, நடைபயிற்சியை இரு வேளை அவசியம் செய்ய வேணும். இதன் பொழுது நுரையீரலின் ஆக்சிஜன் கொள்ளளவு அதிகரிக்கும்.
 • நேரத்துக்கு உறங்க வேண்டும். உறக்கத்தின் பொழுது தான் உடல் தன்னை தானே சீரமைக்கும்.
 • தேவையான அளவு நீர் அருந்த வேண்டும். எப்போதும் சூடாக நீர் அருந்துவது நல்லது.
 • கொதிக்கும் நீரில் வெள்ளை பூண்டுகளை போட்டு 30 நிமிடம் வேக வைத்து ஆறியதும் அவற்றை அப்படியே அந்த நீரோடு உட் கொள்ள வேண்டும்.
 • ஓமம், சோம்பு சம அளவில் எடுத்து அதில் அரை பங்கு சீரகம், கால் பங்கு மிளகு சேர்த்து, அதனோடு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் அதில் ஒரு மேசைகரண்டி அளவு எடுத்து காய்ச்சி, மஞ்சள் சேர்த்து தேநீராக அருந்த வேண்டும்.
இன்றைய நோய் சூழலில் இருந்து ஒவ்வொருவரும் தன்னை பாதுகாத்து கொள்ள ஆவண செய்யுங்கள்.
உங்கள் ஆரோக்கியம் உங்கள் கைகளில் மட்டுமே உள்ளது.
வாழ்க நலமுடன்!
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

3 பிரபல கொள்ளையர்கள் கைது

607 பொள்ளாச்சி:பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதிகளில் அடிக்கடி திருட்டு, வழிப்பறி, போன்ற சம்பவம் நடந்து வந்தது  கோவை மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ் உத்தரவின்பேரில் டி ஐ ஜி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami