சீவலப்பேரி கோவில் பூசாரி கொலையில் மேலும் 3 பேர் கைது

Prakash
0 0
Read Time1 Minute, 21 Second

 

நெல்லை:பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில் பூசாரி சிதம்பரம் என்ற துரை (வயது 41) கடந்த 18-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கோவிலில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டார். மேலும் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்த தனிப்படையினர் விசாரணை நடத்தி, இந்த கொலை தொடர்பாக முருகன், வலதி உள்பட 7 பேரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சீவலப்பேரி தேரடி தெருவைச் சேர்ந்த இளங்காமணி (42), சீவலப்பேரி காலனி தெருவைச் சேர்ந்த சேகர் (40), சீவலப்பேரி பேச்சிகுட்டி (42) ஆகிய மேலும் 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குழந்தையை மீட்ட போலீசாருக்கு பாராட்டு

328 திருச்சி– திருச்சி சென்னை ஒய் ரோடு நெ.1 டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் பெற்றோரை தவற விட்ட 2 வயது ஆண் குழந்தையை மீட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami