காதல் விவகாரத்தில் டி.வி. நடிகையுடன் தகராறு; உதவி இயக்குனர் உள்பட 3 பேர் கைது

Prakash
0 0
Read Time1 Minute, 57 Second

 திருவொற்றியூர், சென்னை மணலி, பல்ஜிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24) டெலிவிஷன் நடிகை. பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு 2019-ம் ஆண்டு சரவணன் என்பவருடன் திருமணமானது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

இதற்கிடையில் தான் நடித்து வரும் தொலைக்காட்சி தொடரில் உதவி இயக்குனராக பணிபுரியும் நவீன்குமார் (25) என்பவருடன் ஜெனிபருக்கு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியதாக தெரிகிறது. இருவரும் காதலித்து வந்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் ஜெனிபர் வீட்டுக்கு சமாதானம் பேச நவீன்குமார் சென்றார். அப்போதும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த ஜெனிபரின் தந்தை பெரியநாயகம், அவருடைய இளைய மகன் சேவியர் இருவரும் நவீன்குமாரை கண்டித்ததுடன், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நவீன்குமார், ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி இயக்குனர் நவீன்குமார் மற்றும் அவருடைய நண்பர்களான பாண்டியன் (24), கார்த்திக் (27) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னை விமான நிலையத்தில் ரூ.33½ லட்சம் தங்கம் பறிமுதல்

318   ஆலந்தூர்,  சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami