காவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்

Admin
0 0
Read Time4 Minute, 46 Second
தூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் 2வது கட்டமாக தீவிரமாக பரவி வருகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்திலுள்ள விருப்பமுள்ள அனைத்து காவல்துறையினருக்கும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று (18.04.2021) தூத்துக்குடி மாநகர காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘கோவிஷீல்டு” தடுப்பூசி போடும் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கணேஷ் முன்னிலையில் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் 30 பேர் இந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கொரோனா வைரஸ் தற்போது நாளுக்கு நாள் இரண்டாம் கட்டமாக வேகமாக பரவி வருகிறது. இந்தக் கொடிய நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு பொதுமக்கள் தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.
நாம் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்றும், கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகச் சிறந்ததாகும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எடுத்துரைத்துத்தார். பின் காவல்துறையினருக்கு கபசுரக்குடிநீர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி கணேஷ் நகர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் திருமதி. ஆர்த்தி, தூத்துக்குடி மாநகர நல அலுவலர் திருமதி. வித்யா, தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளார் திரு. அருள், தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாந்தி, தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. செந்தில்சுரேஷ் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்

222 மதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami