Read Time1 Minute, 19 Second
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் இன்று (03.04.2021) மாலை நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய வாக்குகள் எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.G.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் (தெற்கு) டாக்டர்.N.கண்ணன், இ.கா.ப, திரு.செந்தில்குமார், இ.கா.ப, (வடக்கு) இணை ஆணையாளர்கள் திரு.V.பாலகிருஷ்ணன், இ.கா.ப, (கிழக்கு), திருமதி. S.லட்சுமி, இ.கா.ப (தெற்கு) திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு.P.பகலவன், இ.கா.ப, மற்றும் சரக காவல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடனிருந்தனர்.