மதுரை சிந்தாமணியில் சுடு தண்ணீர் கொட்டியதில் அரிசி ஆலை பாய்லர் ஆப்பரேட்டர் பலி
மதுரை மார்ச் 24 சிந்தாமணியில் அரிசிஆலையில்பாய்லர் தண்ணீர் கொட்டியதில்அதன்ஆப்பரேட்டர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாடிப்பட்டி தாலுகா பாண்டியராஜா புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் 40. இவர் சிந்தாமணியில் உள்ள அரிசி ஆலையில் பாய்லர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.சம்பவத்தன்று பாய்லர் சுடு தண்ணீர் இவர் மேல்கொட்டியதால் உடல் வெந்து படுகாயம்அடைந்தார். ஆபத்தான நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனில்லாமல் பிரபாகரன் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து மனைவி தீபா கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாகனக் கடனை திருப்பிசெலுத்த முடியாமல் மனமுடைந்தவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை மார்ச் 24 வாகனக் கடனை செலுத்த முடியாமல் அவதிப்பட்டவர் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் . திருப்பரங்குன்றம் ஆர்.வி.பட்டியை சேர்ந்தவர் கல்யாண்குமார் 45. இவர் கடனுக்கு இருசக்கர வாகனம் வாங்கியிருந்தார். அதற்க்கான தவணை தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மன அழுத்தத்தில் இருந்தவர்வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தல்லாகுளம் பகுதியில் டாஸ்மாக் கடையின் முன்பாக குடி போதையில் மயங்கி விழுந்த வாலிபர் பலி
மதுரை மார்ச் 24 சிலைமான் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் பஷீர் அகமது மகன் காசிம்முஸ்தபா 29 .இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.இவர் நரிமேடு பி.டி.ஆர்ரோட்டில் அளவுக்கதிகமான போதையில் டாஸ்மாக் கடைக்கு எதிரேயே மயங்கி விழுந்து பலியானார்.இது குறித்து அவருடைய தந்தை பசீர் அகமது கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோலை அழகுபுரத்தில்முன்விரோதத்தில் தாக்குதல் ஒருவர் கைது
மதுரை மார்ச் 24 ஜெய்ஹிந்த்புரம் சோழபுரம் முதல் தெருவை சேர்ந்தவர்சேக் சுல்தான் 27. அதே தெருவை சேர்ந்தவர் செல்வபாண்டி 21. இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.இந் நிலையில் சுல்தானை செல்வப்பாண்டி ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார் .இந்த சம்பவம் தொடர்பாக சுல்தான் கொடுத்த புகாரின் பேரில்ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாள் மகன் செல்வ பாண்டியை கைது செய்தனர்.
தல்லாகுளத்தில் முன்விரோதத்தில் டூ வீலர் தீ வைத்து எரிப்பு வாலிபர் கைது
மதுரை மார்ச் 24 முல்லை நகர் தாரகன் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன்சிரிதர். இருவருக்கும் முல்லைநகர் கம்பர் தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சுரேஷ் 21 இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வீட்டின் முன்பாக சிரிதர் நிறுத்தி வைத்திருந்த டூவீலரை தீ வைத்து சுரேஷ் எரித்துவிட்டதாககூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிரிதர் தல்லாகுளம்போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷைகைது செய்தனர்.
மதுரை பைபாஸ் சாலையில் ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
மதுரை மார்ச் 24ம் மதுரை பைபாஸ் சாலையில் தனியார் வங்கி ஒன்று உள்ளது .இந்த வங்கியில் வைக்கப்பட்டிருந்த ஏடிஎம்ஐ நள்ளிரவில் சிலர் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர் .ஆள்நடமாட்டம் ஏற்படவே அவர்கள் தப்பி ஓடிவிட்டனர் .பின்னர் இந்த சம்பவம் தெரியவந்தது .இதுதொடர்பாக அந்த வங்கியின் கிளை மேலாளர் பெர்க்கினியான்எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடிக்க முயன்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சலூன் கடையை உடைத்து மூன்றரை லட்சம் கொள்ளை
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சலூன் கடையை உடைத்து மூன்றரை லட்சம் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் .
மதுரை எல்லீஸ் நகரைசேர்ந்தவர் முரளிதரன் 31 .இவர்மேலவெளிவீதி பெரியார் பேருந்து நிலையம் அருகே மாடியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.இவர் வழக்கம் போல இரவு கடையை மூடிவிட்டு சென்றவர் மறுநாள்வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது .கடையில் வைத்திருந்த மூன்று லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த கொள்ளை தொடர்பாக முரளிதரன் திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
சிந்தாமணியில் லோடு வேன் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி
மதுரை சிந்தாமணியில் லோடு வேன் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானார். சிந்தாமணி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ரவி மகன் நந்தா19. இவர் சிந்தாமணி மெயின் ரோடு வேப்பமரம் பஸ் ஸ்டாப் அருகே இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேன் மோதி விபத்துக்குள்ளானது.இதில் ஆபத்தான நிலையில்நந்தாவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நந்தா பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லோடு வேன் டிரைவர் திருப்புவனம் கீழடியை சேர்ந்த பூமணி 23 என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக்காராவில் பயங்கர ஆயுதங்களுடன் 40 கிலோ கஞ்சா பறிமுதல் 6 பேர் கைது
மதுரை பைக்காராவில் பயங்கர ஆயுதங்களுடன் 40 கிலோ கஞ்சாவுடன் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சுப்பிரமணியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம். இவருக்கு பைக்காராபகுதியில் இரு சக்கர வாகனங்களில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்துஇவர் போலீசாருடன் போடிலயன்பகுதிக்கு சென்று சோதனை செய்தார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் கப்பலூரைச் சேர்ந்த லட்சுமணன் என்ற தாளம்பூ,கீரைத்துறையைச் சேர்ந்த சூர்யா 25, திருநகரை சேர்ந்த சரவணகுமார் மகன் திருமலை ,கள்ளிக் குடியைச் சேர்ந்த காளிமுத்து மகன் சித்திரவேல் என்றசூர்யா, பைக்காராவைசேர்ந்த மணி மகன் கோபி, பீபிகுளத்தைச் சேர்ந்த தீபக் அந்த குட்டி கருவாயன் ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர் .மற்றொரு வாலிபர் சிவகுமார் என்ற வாழைப்பழம் தப்பி ஓடிவிட்டார்அவரை தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சா 3 இருசக்கர வாகனங்கள், மூன்று கத்தி ,அரிவாள்இரண்டு,ஒருசூரிக்கத்தி முதலியவைகளை பறிமுதல் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி