Read Time1 Minute, 3 Second
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே வெள்ளாப்பட்டி புதூரில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே நேற்று நல்லிரவில் மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறை ஆய்வாளர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பொதுமக்கள் என 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில், இந்த மோதல் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 15 பேரை கைது செய்து நடவடிக்கை. இந்த சம்பவம் தொடர்பாக மேலும், சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி