Read Time1 Minute, 7 Second
சென்னை: J-6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க சென்னை பெருநகர காவல் துறையினருடன் இணைந்து மத்திய துணை ராணுவப்படை எல்லை பாதுகாப்புப்படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று (14.03.2021) காலை J-6 திருவான்மியூர் காவல் நிலையத்தில் இருந்து தரமணி சரக உதவி ஆணையாளர் திரு.P.K ரவி அவர்கள் தலைமையில் துவக்கப்பட்டது. கொடி அணி வகுப்பு திருவான்மியூர் மீனவ குப்பம், வால்மீகி நகர், திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் பேருந்து நிலையம், ஜெயந்தி சிக்னல் வழியாக, பெரியார் நகர், இந்திராநகர் 28 வது குறுக்கு தெருவில் முடிக்கப்பட்டது.