மதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்

Admin
0 0
Read Time5 Minute, 39 Second

மதுரை தெற்கு மாரட்வீதியில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை மார்ச் 7 குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் மதுரைதெற்குமாரட் வீதியை சேர்ந்தவர் முபாரக் மனைவி சையத் அலி பாத்திமா 32.இவர் வீட்டில் அடிக்கடி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சையத் அலி பாத்திமா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை முகம்மது கான் கொடுத்த புகாரில் திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
**********

செல்லூர் மீனாம்பாள் புரத்தில் நோய்வாய்ப்பட்ட மூதாட்டி மனமுடைந்து வீட்டில் தீக்குளித்து தற்கொலை

மதுரை மார்ச் 7 செல்லூரில் நோய்வாய்ப்பட்ட மூதாட்டி மனமுடைந்து வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். செல்லூர் மீனாம்பாள்புரம் பூமி உருண்டை தெருவை சேர்ந்தவர் மெஹர் பானு 62 அவருக்கு சர்க்கரை நோய் , ரத்த அழுத்தம்நோய் இருந்தது .இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. அதன் காரணமாக வீட்டில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது மகள் நாகூரம்மாள் கொடுத்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**********

மதுரை அருகே பைக் மோதி சாலையை கடந்தவர் பலியானார்

மதுரை மார்ச் 7மதுரைஅருகே சாலையை கடந்தவர் பைக் மோதி பலியானது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகங்கை மெயின் ரோடு சீமான் நகர் பஸ் ஸ்டாப் அருகே சாலையை கடந்தபோது ஆண்டார்கொட்டாரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் செல்வம் 34 என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி சம்பவ இடத்திலேயே நடந்து சென்றவர் பலியானார்.க இதுகுறித்து மங்கலக்குடி பாலாஜி நகரைச் சேர்ந்த கிராமநிர்வாக அதிகாரி நர்க்கீஸ்கொடுத்த புகாரின் பேரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்து வருகின்றனர்.
***********

மதுரை அருகே மகனுடன் பைக்கில் சென்ற தாய் தவறி விழுந்து பலி

மதுரை மார்ச் 7 மதுரை அருகே மகனுடன் பைக்கில் சென்ற தாய் தவறி விழுந்து பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் மேலக்கோட்டையை சேர்ந்தவர் அம்சவள்ளி 45.இவரது மகன் செந்தில்குமார் 25. இவர்கள் இருவரும் உறவினரின் கிரகப்பிரவேச வீட்டிற்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் ரோடு திருமங்கலம் நான்கு வழி சாலையில் சென்றபோது பின்னால் இருந்த அம்சவல்லி கால்வழுக்கி தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தவிபத்துகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
***********

மதுரை அருகே தாய்இறப்பில் மர்மம் தம்பி மீது அக்கா புகார் போலீஸ் விசாரணை

மதுரை மார்ச்7 தாய்இறப்பில் மர்மம் இருப்பதாக தம்பி மீது அக்கா போலீசில் புகார் செய்துள்ளார். மதுரை அருகே துவரிமான் கீழத் தெருவை சேர்ந்தவர் காமாட்சி அம்மா 83 . இவர் தனது மகன் ஜானகிராமன் வீட்டில் இருந்துவந்தார். இடப் பிரச்சினை காரணமாக இவருடைய மகள் அண்ணமயிலுக்கும் மகன் ஜானகிராமனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் காமாட்சி அம்மாள் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார்.இவருடைய இறப்பை மகளுக்கு தெரிவிக்காமல் ஜானகிராமன் அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது .இந்த தகவல் பின்னர் தெரியவர மகள் அன்னம் மயில் சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
***********


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் ? எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்

345 மதுரை : மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் டைமர் உடன் இணைக்கப்பட்ட தெரு விளக்குகள் போடப்பட்டது . இதில், பல […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami