Read Time1 Minute, 9 Second
மதுரை : மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த 30 ஆயிரம் மதிப்புள்ள பைக்கைதிருடியஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை விஸ்வநாதபுரத்தைசேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சூரிய பிரகாசம் 30 .இவர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு சென்றார். அங்கு டவுன் பஸ் நிறுத்தத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுசென்றவர் திரும்பி வந்து பார்த்த போது மர்ம ஆசாமிகள் அந்த பைக்கை திருடிவிட்டனர். இதன் மதிப்பு 30 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக சூரிய பிரகாசம் அண்ணாநகர் போலீசில் புகார் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பைப் திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி