கோவை எஸ்பி அலுவலகம் முற்றுகை:51பெண்கள் கைது

Admin
0 0
Read Time2 Minute, 1 Second

கோவை : பெண் எஸ்பிக்குபாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ்நாடு காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜஸ்தாசை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய கோரி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், கோவையில் நேற்று ஸ்டேட் வங்கி ரோட்டிலுள்ள கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து அகில இந்திய துணை செயலாளர் சுதா சுந்தரராமன் மாநில தலைவர் வாலண்டினா மாநில பொதுச்செயலாளர் சுகந்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி பிரமிளா அமிர்தம் ராதிகா உட்பட மாதர் சங்க நிர்வாகிகள் தலைமையில் ஏராளமான பெண்கள் எஸ்பி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள் –  இதனால் போலீசாருக்கும் மாத சங்கத்தினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் எஸ்பி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்திய 51 பெண்களை போலீசார் கைது செய்தனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இன்றைய கோவை கிரைம்ஸ் 03/03/2021

317 ஏடிஎம் டிஜிட்டல் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி கோவை: காளப்பட்டி சாலையில் நேரு நகர் பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையம் செயல்பட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami