Read Time1 Minute, 36 Second
மதுரை : மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நேற்று 21.02.2021 ம் தேதி காலை மூளைச்சாவு அடைந்த பழனியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் உள்நோயாளியாக உள்ள ஒருவருக்கு டிரான்ஸ் ப்ளான்டேஷன் செய்வதற்காக மதியம் 12.57 மணிக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் 13.10 மணிக்கு மதுரை விமான நிலையத்தை சென்றடைந்தது. இதற்காக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் திரு. சுகுமாரன் தலைமையில், காவல் உதவி ஆணையர்கள் திரு. திருமலைக்குமார், திரு. மாரியப்பன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் திரு. ராஜேஷ், திரு. கணேஷ் ராம், திரு. சுரேஷ் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை இந்த பணிக்கு நியமிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் எந்த இடத்திலும் நிற்காமல் செல்வதற்காக Green Corridor போக்குவரத்து ஏற்பாடுகளை செய்தும் 13 நிமிடத்திற்குள் விமான நிலையத்தை சென்றடைந்தது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி