Read Time1 Minute, 24 Second
தேனி :தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், முத்துக்குமார் என்ற மாணவர் சாலையில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது சாலையில் பர்ஸ் மற்றும் செல்போன் கிடப்பதை கண்ட அவர் அதை பத்திரமாக எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதனையடுத்து காவல் ஆய்வாளர் திருமதி.N.S.கீதா அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் பர்ஸ்சில் உள்ள முகவரியை தொடர்பு கொண்டதில் அது கம்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்ததையடுத்து பர்ஸ்,அதில் உள்ள பணம் 5000/- மற்றும் செல்போனை அவரிடம் ஒப்படைத்தனர்.
பள்ளி மாணவரின் நேர்மையான செயலை ஊக்குவிக்கும் வகையில் கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் அவர்கள் பள்ளி மாணவனை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி