இன்றைய மதுரை கிரைம்ஸ்

Admin
0 0
Read Time3 Minute, 41 Second

மதுரை பழங்காநத்தத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை பழங்காநத்தத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த கணவர் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பழங்காநத்தம் கீழத் தெருவை சேர்ந்தவர் மச்சக்காளை மகன் கூர்க் கார்த்திக் 29. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது .இதன் காரணமாக கணவரை பிரிந்து தனியாகமனைவி வாழ்ந்து வந்தார். இதனால் மனமுடைந்த கார்த்திக் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் தொடர்பாக தந்தை மச்சக்காளை கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
*******

மதுரை முத்து பாலம் அடியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

மதுரை முத்து பாலம் கீழ் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஜெய்ஹிந்துபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஜெயந்திபுரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த மாரிச்சாமி மகன் வசந்த் 27 என்பவரிடம்இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
*********

மதுரை அருகே சமையல் மாஸ்டர் சந்தேக மரணம் போலீஸ் விசாரணை

மதுரைஅருகே சமையல் மாஸ்டர் சந்தேகம் மரணமடைந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலூர் அருகே கச்சிராயன் பட்டியை சேர்ந்தவர் முருகேசன் 44 .இவர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.சம்பவத்தன்று சமையல் வேலை முடித்துவிட்டு சக ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வதற்காக மாங்குளப்பட்டிக்கு சென்றவர் அவர் சென்ற வர் அந்தபகுதியில்உள்ள கண்மாய் அருகே மர்மமான முறையில் காயங்களுடன் மயங்கி கிடந்தார.பின்னர் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர் ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி திலகம் கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்தார்.புகாரில் உடன் வேலை பார்க்கும் ஒருவருக்கும் கணவருக்கும் இடையே தகராறு நடந்ததாகவும் அதனால் அவர் சாவில் மர்மம் இருப்பதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல் காவல்துறையினர் பாதுகாப்பில் ஜல்லிக்கட்டு

388 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் திமிரும் காளைகளை உற்சாகத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கினர். கோட்டாட்சியர் உஷா கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் கிழக்கு வட்டாட்சியர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami