Read Time2 Minute, 0 Second
தென்காசி : தென்காசி மாவட்டம்,தென்காசி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இடைக்கால் துரைசாமிபுரத்தை சேர்ந்த பெருமாள் சாமி என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன்(24) மற்றும் தென்காசியை சேர்ந்த காஜா மைதீன் என்பவரின் மகன் அப்துல் ரஹ்மான் @ ஜிலேபி(23) என்ற இரண்டு நபர்களையும் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுண சிங் இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில்,மேற்படி பெருமாள் சாமி என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (24) மற்றும் காஜா மைதீன் என்பவரின் மகன் அப்துல் ரஹ்மான் @ ஜிலேபி(23) ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 03.02.2021 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் சமர்பித்தார்.
தென்காசியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
