Read Time1 Minute, 46 Second
கோவை: தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் கோவை மாநகர காவல்துறைக்கு அதிநவீன காமிரா வழங்கப்பட்டுள்ளது. கோவையில் ஊர்வலங்கள்,திருவிழாக்கள், பண்டிகைக்கால கூட்ட நெரிசல்கள், தேரோட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் மறியல் போராட்டங்கள் ஆகிய நிகழ்ச்சிகள் ட்ரோன் காமிரா மூலம் படம் பிடிக்கபட்டு வருகிறது.
குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு இந்த டிரோன் கண்காணிப்பு காமிரா பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இரவு நேரங்களிலும் துல்லியமாக படம் பிடிக்கும் அதி நவீன ட்ரோன் கேமரா பிஎஸ்ஜி மற்றும் ஜி ஆர் ஜி கல்வி நிறுவனங்கள் சார்பில் மாநகர காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த டிரோன் காமிராவை கல்வி நிறுவனங்களின் அறங்காவலர்களான கோபாலகிருஷ்ணன் மற்றும் நந்தினி ரங்கசாமி ஆகியோர் காவல் ஆணையரணிடம் இன்று வழங்கினர். இந்த ட்ரோன் கேமிரா 4 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று படம் பிடிக்கும் திறன் கொண்டது என்றும் இரவு நேரங்களில் கண்காணிக்கும் (நைட்விஷன் ) பொறுத்த பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் திரு.சுமித் சரண் தெரிவித்துள்ளார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்