சென்னை பெண் காவலர்கள் புத்துணர்வு முகாமில் விருது வழங்கி சிறப்பு

Admin
0 0
Read Time2 Minute, 14 Second
சென்னை: சென்னையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று , அவர்களுக்கு மன ரீதியாகவும் , உளவியல் ரீதியாகவும் , சட்டரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிட சென்னை பெருநகர காவல் துறையில் தோழி திட்டம் செயல்பட்டுவருகிறது .
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் , இ.கா.ப அவர்கள் இன்று ( 03.02.2021 ) காலை காவல் ஆணையாளர் அலுவலகம் , இரண்டாம் தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் , பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவிடும் தோழி திட்டம் மகளிர் காவல் ஆளினர்களுக்கான ஒரு நாள் புத்துணர்வு பயிற்சி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் .
மேலும் தோழி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் திருமதி . வள்ளியம்மை ( த.கா .32253 ) மைலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் திருமதி . புனிதா ( த.கா .19270 ) வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் திருமதி.வனிதா ( த.கா .25108 ) அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் திருமதி . வளர்மதி ( த.கா .36688 ) ஆகியோருக்கு காவல் ஆணையாளர் தோழி விருது வழங்கி கௌரவித்தார்.

சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நற்கருணை வீரன் விருது வழங்கும் விழா, லோகநாதன் IPS சிறப்புரை

434 திருச்சி: 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கடந்த 2020-ஆம் ஆண்டு திருச்சி மாநகரில் நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துக்களின் போது மாநகர காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami