மதுரையில் நடைபெற்ற முக்கிய கிரைம்ஸ்

Admin
0 0
Read Time6 Minute, 2 Second

கோவில் கும்பாபிஷேகத்தில் கைவரிசை 4 பெண்களிடம் 19 பவுன் திருட்டு

மதுரை நாராயணபுரத்தில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் 4 பெண்களிடம் 19 பவுன் நகையை பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை நாராயணபுரத்தில் மந்தையம்மன் கோவில் உள்ளது .இந்த கோவிலில் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். தற்போது அந்த பகுதியில் பால வேலை நடைபெறுவதால் அந்த கோயிலை மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்தார்கள். கட்டிடக்கலையின்நவீன முறையாக கோவிலைஅப்படியே நகற்றிமாற்று இடத்தில் வைக்கப்பட்டது.பின்னர் பழுது பார்க்கும் வேலை எல்லாம் நடந்தது.அதைத்தொடர்ந்துமுந்தைய மூன்று நாட்கள் யாகசாலை உட்பட‌ பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் நேற்று அதிகாலை கும்பாபிசேகம்நடந்தது.கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது .அப்போது பக்தர்கள்கூட்டத்தில் கைவரிசையைகாட்டி நான்குபெண்களிடம் தங்கநகையை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர் .நாராயணபுரம் கோலதெருவைசேர்ந்த ஞானசுந்தரி 65 என்பவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை மர்ம ஆசாமிகள் பறித்துச்சென்றுவிட்டனர்.மற்றொருவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் இந்திராணி65.இவர் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்.அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை மர்மநபர்பறித்துசென்றுவிட்டார்.மற்றொரு நபர் கேசவசாமி தெருவை சேர்ந்தவர் தமிழரசி 60 . அவர் அணிந்திருந்த ஐந்தரைபவுன் தங்கசெயினையும் கூட்டத்தில் பறித்துவிட்டனர்.நாராயணபுரம் கேசவசாமி தெருவை சேர்ந்த அழகம்மாள்70அவர்.அணிந்திருந்த 3 பவுன் நகையை கும்பாபிஷேகத்தில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது ஆசாமிகள் பறித்துவிட்டனர். இது தொடர்பாக அவர்கள்கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின்பறித்த ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
வருகின்றனர்.


நடத்தையில் சந்தேகம் கிரைண்டர் கல்லால் அடித்து தாய் கொலை
கல்லூரி மாணவன் கைது

மதுரை நடத்தையில் சந்தேகம் அடைந்து கிரைண்டர் கல்லால் அடித்து தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர் மனைவி வாஞ்சி மலர் 49 .இவருக்கு ஓம் சக்தி என்ற 19 வயது மகன் உள்ளார். இவர் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார் .ஓம் சக்தி பிறந்தது முதலே அவரை விட்டுவிட்டு தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். இதனால் தாய் ,மகனை வளர்த்து வந்துள்ளார் .இந்நிலையில் தாயின் நடத்தையில் மகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதை மகன்கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது .இதனால்ஆத்திரம்அடைந்த.ஓம்சக்தி வீட்டிலிருந்த கிரைண்டர் கல்லால் தாக்கிதாய் வாஞ்சிமலரை கொலை செய்துவிட்டார். பின்னர் அங்கிருந்து சென்ற போது தகவலறிந்த போலீசார் அவரை கைது செய்தனர் .இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உறவினர் வீட்டு விருந்தில் அளவுக்கதிகமாக கறிசோறு சாப்பிட்டவர் மயங்கி விழுந்து சாவு

உறவினர் வீட்டில் விருந்து ஒன்றில் அளவுக்கு அதிகமாக கறிசோறு சாப்பிட்டவர் மயங்கி விழுந்து பலியானார்
மதுரை ராஜா மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் 43 இவர் நேற்று உறவினர் வீட்டில் விருந்து ஒன்றில் குடும்பத்துடன் கலந்து கொண்டார் அங்கு கறிசோறு பரிமாறப்பட்டது .அதில் , அளவுக்கு அதிகமாக உட்கொண்ட நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குகொண்டுசென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே கண்ணன்பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இவருடைய மனைவி சுகந்தி கொடுத்த புகாரின் பெயரில் திலகர்திடல்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னை பெண் காவலர்கள் புத்துணர்வு முகாமில் விருது வழங்கி சிறப்பு

761 சென்னை: சென்னையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami