முகமூடி அணிந்து கொள்ளையடித்த 03 நபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Admin
0 0
Read Time2 Minute, 21 Second

திருவண்ணாமலை : திருவண்ணாமலை தாலுக்கா, கீழ்செட்டிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா வ/34 என்பவரது வீட்டில் நள்ளிரவில் முகமூடி அணிந்த கும்பல் ராஜா வீட்டின் கதவை உடைத்து, அவரை தாக்கி வீட்டில் இருந்த ரூபாய் 10,000/- மற்றும் 1,30,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக, ராஜா தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு காவல் ஆய்வாளர் திருமதி.தனலட்சுமி அவர்கள், புலன்விசாரணை செய்து கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுக்கா, ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியகுமார் மகன் 1)பாஸ்கர், வ/26. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுக்கா, பெருவல்லூர் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகன் 2)கிரி, வ/31. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்கா, நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் 3)மாரி வ/27, என்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, மூவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி.IAS., அவர்கள் பாஸ்கர், கிரி மற்றும் மாரி ஆகிய மூன்று நபர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆரணி காவல்துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி

869 திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் அரவிந்த் உத்தரவின்பேரில் ஆரணி உட்கோட்டம் கண்ணமங்கலம் காவல் நிலையம் சார்பில் 32வது சாலைபாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami