Read Time1 Minute, 27 Second
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நான்காவது புத்தகக் கண்காட்சியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்து, முதல் புத்தகத்தை பெற்றுக் கொண்டார்கள். இப்புத்தகக் கண்காட்சி இன்று 22.01.2021 முதல் பிப்ரவரி 04 வரை 14 நாட்கள் தினமும் காலை 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடக்கிறது. இக்கண்காட்சியில், 50 புத்ததக வெளியீட்டு நிறுவனங்களின் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கான புத்தகங்கள், நாவல்கள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள், போட்டி தேர்வு புத்தகங்கள், சிறுகதைகள், புதினங்கள், வரலாற்று நாவல்கள் இடம்பெற்று உள்ளன. இக்கண்காட்சியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்