Read Time1 Minute, 6 Second
கோவை : கோவை மாவட்ட பில்லூர் டேம் பக்கம் உள்ள பரளி வீரக்கல் பகுதியை சேர்ந்தவர் மன்னன் ( வயது 85) ஆதிவாசி . நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது இவரது பேரன் முருகேஷ் (வயது 40 )அங்கு வந்தார் தாத்தாவிடம் புகையிலை கொடுக்குமாறு கேட்டார். அவர் இல்லை என்று மறுத்தார். இதனால் ஆத்திரம் முருகேஷ் தடியாலும் கல்லாலும் தாத்தா மன்னனின் தலையில் தாக்கினார்.இதில் மன்னன் அதே இடத்தில் பலியானார் முருகேஷ் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது இதுகுறித்து பில்லூர் டேம் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசை இன்று கைது செய்தனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்