Read Time1 Minute, 18 Second
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 20.01.2021-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மருவத்தூரில் இருதரப்பினருக்கும் இடையே சாதி மோதல்கள் ஏதுமின்றி தடுத்து நிறுத்தியதற்காக மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகியோரை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கியும், HWP II சிறப்பாக நெடுஞ்சாலை ரோந்து அலுவல் புரிந்தமைக்காக பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவல் பணியை சிறப்பாக புரிந்தமைக்காக தலைமை காவலரை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.