Read Time1 Minute, 16 Second
திருவண்ணாமலை : வந்தவாசியில் சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு 19.01.2021 செவ்வாய் கிழமை காலை வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் வந்தவாசி உட்கோட்டம் காவல் துறை மற்றும் அன்பால் அறம் செய்வோம் பொது சேவை குழு இணைந்து நடத்தும் விபத்தில்லா வந்தவாசி விழிப்புணர்வு நிகழ்வு. இதில் S Creation மற்றும் அன்பால் அறம் செய்வோம் பொது சேவை குழுவினர் சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு படமான சீராட்டு(The Helmet) என்ற குறும்படத்தை வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளர் தங்காராமன் வெளியிட்டார். மற்றும் மைம் கலை மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது இதில் பொதுமக்கள் மற்றும் ஊடக துறை நண்பர்கள், காவல் துறை நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்