Read Time57 Second
மதுரை : வீட்டில் தவறி விழுந்த வாலிபர் தூங்கியபோது பரிதாபமாக உயிரிழந்தார்.
பெத்தானியாபுரம் பாஸ்டின் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் மகன் அன்புச்செல்வன் 38. இவர் வீட்டில் திடீரென்று கால் தவறி விழுந்தார். இதில் பலமாக அடிபட்டது .பின்னர் மயக்கம் தெளிந்து சகஜ நிலைக்கு திரும்பினார்.பின்னர் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது அவருடைய உயிர் பிரிந்தது .இது தொடர்பாக மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி