Read Time1 Minute, 6 Second
மதுரை : மதுரை மாநகரங்களில் இரவு பெய்த கனமழையின் காரணமாக நாச்சியார் முதல் காபா ஜவுளிக்கடை முன்பு உள்ள சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர். இதனால் தெற்குவாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் சேர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையிலும் இருந்த பள்ளங்களை தங்களது சொந்த முயற்சியால் JCB மூலம் சரிசெய்து பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழி வகை செய்து வருகின்றனர். போக்குவரத்து காவல்துறையினரின் இச்செயல்களை வாகன ஓட்டிகள் பாராட்டி வருகின்றார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி