காவலர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ மற்றும் கண் சிகிச்சை முகாம், DSP துரைபாண்டியன் தலைமை

Admin
0 0
Read Time4 Minute, 56 Second
திருவள்ளூர் : மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு தோறும் டிசம்பர் 24 ஆம் தேதி காவலர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புன்னப்பாக்கம் என்ற கிராமத்தில் காவலர் தினம் டிசம்பர் 24 ஐ முன்னிட்டு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவ முகாம் புன்னப்பாக்கம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. பனிமலர் மருத்துவமனையிலிருந்து கலந்து கொண்ட மருத்துவர்கள் பொதுவான பரிசோதனையை செய்தனர். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையிலிருந்து கண் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இலவச கண் பரிசோதனை முகாமும், முழு உடல் பரிசோதனை முகாமும் நடைபெற்றது.
புன்னப்பாக்கத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர். கண் பரிசோதனை, காய்ச்சல், கால் வலி, இரத்தக்கொதிப்பு, உடல் வலி போன்ற வியாதிகளுக்காக பரிசோதித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். உடல் சம்பந்தமான பிரச்சனைகள், கண்பிரச்சனை இரண்டும் சேர்ந்து 500 க்கும் மேற்ப்பட்டவர்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.
முகாமில் பரிசோதிக்க வந்த நோயாளிகளை உற்சாகப்படுத்தும் விதமாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன்,IPS அவர்கள் ஆணைக்கு இணங்க, காவல் துணை கண்காணிப்பாளர் திரு.துரைபாண்டியன் கலந்து கொண்டு சிறப்பித்தார். திருவள்ளூர் காவல்துறைக்கு சிறப்பு சேர்த்துள்ள காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், இந்தியாவிலேயே இளம்வயது ஐபிஎஸ் அதிகாரிகளின் இரண்டாவது இடத்தில் இருக்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த தமிழக காவல் துறை அதிகாரி திரு.அரவிந்தன் ஐ.பி.எஸ். இவர் உருவாக்கியுள்ள பேஸ் டேக் என்ற செயலி, கடந்த ஆண்டு, ஸ்காட்ச் விருது பெற்றது. இந்த ஆண்டும், கொரானா பாதுகாப்பு பணியில், சிறப்பாக பணியாற்றியமைக்காக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை, ஸ்காட்ச் விருது பெற்றுள்ளது.
திருவள்ளூர் காவல்துறையை சிறப்பாக வழிநடத்தி செய்வதில், அரவிந்தன், ஐ.பி.எஸ் வல்லவர். அவருடன் இணைந்து பணியாற்றி வரும், காவல் துணை கண்காணிப்பாளர் திரு.துரைபாண்டியன் அவர்களும், இரவு பகல் பாராமல் உழைக்கும் தன்மையுடையவர். குற்ற வழக்குளை திறம்பட செயல்பட்டு, விரைந்து முடிக்கும் திறமையாளர். சமூக சேவையில் முதன்மையாளராக கலந்து கொள்ளும் பண்பாளர்.
இந்நிகழ்ச்சியை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் மாவட்ட சமூக சேவை பிரிவு பொதுச்செயலாளர் திரு.பாண்டியன் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவி திருமதி.ரமீஜா, திருவள்ளூர் மாவட்ட சமூக சேவை பிரிவு மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.முத்துகுமரன், திருவள்ளூர் மாவட்ட சமூக சேவை பிரிவு பிரதிநிதி திரு.பக்தவச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

2020 காவலர் தினத்தை முன்னிட்டு ஆலங்குளத்தில் உணவு மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி

694 தென்காசி : காவலர்களின் உழைப்பையும், அவர்களுடைய சாதனைகளை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 24 அன்று காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சந்தோஷப்படுத்தும் விதமாகவும் வருடத்தில் ஒருமுறை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami