597
Read Time1 Minute, 7 Second
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வ.உ.சி நகர் சரவணன் இவரது மனைவி சிவபாலா ராமநாதபுரம் தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு இன்று காலை சென்று விட்டு சிவபாலா, ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி ஸ்டேடியம் நுழைவாயில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த சரவணன் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். இச்சம்பவம் குறித்து சரவணனை கைது செய்த கேணிக்கரை போலீசார் சரவணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி