Read Time3 Minute, 6 Second
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் சட்டவிரோத செயல்களான மது விற்பனை, குட்கா மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக தீவிர சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்ய இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
அதனடிப்படையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மதுவிலக்கு தொடர்பாக தீவிர வேட்டை நடத்தியதில், 603 வழக்குகள் பதிவு செய்து, 595 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 6547 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 8 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ ஆகியவை கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் 247 வழக்குகள் பதிவு செய்து, 259 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூபாய் 1,32,500/- மதிப்புள்ள 269 கிலோ குட்கா, 1 கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேபோல், கஞ்சா விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட சோதனைகளில் கஞ்சா விற்ற 60 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து ரூபாய் 3,70,000/- மதிப்புள்ள 37 கிலோ கஞ்சா, 3 கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோத மது, குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும் எனவும், பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் குற்ற இறுதி அறிக்கையானது சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்து, தண்டனையில் முடியும் வகையில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீதான முந்தைய வழக்குகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தொடர்ச்சியாக சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.