689
Read Time1 Minute, 11 Second
தேனி : தேனி மாவட்டத்தில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். தேனி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்ததாக பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த முத்து (48), அன்னஞ்சி சிவா (49), கருவேல் நாயக்கன்பட்டி பாலு (52), கொண்டமநாயக்கன்பட்டி சங்கிலி (57), கண்டமனூர் மூர்த்தி (40), ராமசந்திராபுரம் அய்யப்பன (76), ஆகியோரிடம் இருந்து மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக இருந்து 150 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் பற்றி தேனி மதுவிலக்கு போலீஸ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி