விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி மாவட்ட காவல்துறை !

Admin
0 0
Read Time2 Minute, 43 Second
திருச்சி : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.ஜெயசந்திரன் இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.அஜீம் அவர்கள் அக்டோபர் 15 சர்வதேச கிராமப்புற பெண்கள் தினத்தை முன்னிட்டு 15.10.20 இன்று இலால்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நெருஞ்சலக்குடி ஊராட்சி, மாந்துறை கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேடயம் திட்டத்தின் கைபேசி எண்கள் 9384501999, 63830 71800 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல்நலம், வளர்ச்சிக்கு முக்கியமான இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக் கீரையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு முருங்கை மரக்கன்று நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இலால்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி. பழனியம்மாள், உதவி ஆய்வாளர் திருமதி.ரேணுகா மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு.பிரபு ஆகியோர் கொரோனோ நோய் தொற்று பரவல் தடுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும் சமூக இடைவேளியை பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும்
குடும்ப வன்முறை, வரதட்சனை, பெண்களுக்கான பாலியல் தொல்லை, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
விழிப்புணர்வில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு முககவசமும், கேடயம் திட்டம் தொடர்பான அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை வழக்கில் 3 பேர் கைது !

783 மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்கிற 27 வயது வாலிபரை திருமணத்திற்கு பெண் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami