கொரோனாவால் SSI உயிரிழப்பு! திருப்பத்தூர்  மாவட்ட காவல்கண்காணிப்பாளர்  அஞ்சலி

Admin
0 0
Read Time2 Minute, 7 Second

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். இவரின் உடலுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.P.விஜயகுமார்,IPS  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

திருப்பத்தூரில் இதுவரை கொரோனா தொற்றினால் 4702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 86 பேர் கொடிய கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளனர். மேலும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 583ஆக உள்ளது. பூரண குணமடைந்து வீடு திருப்பியவர்களின் எண்ணிக்கை 4033 ஆக உள்ளது. இந்த நிலையில் ஆம்பூரில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த சண்முகம் என்பவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்

இவை காவலர்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றிய சண்முகம் என்பவருக்கு கடந்த 12ம் தேதி முதல் காய்ச்சல் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பின்னர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் உடலுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 51 வயதான உதவி ஆய்வாளருக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

செய்யவிருந்த குற்றம் சென்னை போலீசாரால் உரியநேரத்தில் தடுக்கப்பட்டது

162 சென்னை:  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, H-1 வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு) அவர்களின் தலைமையிலான […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami