இராணிப்பேட்டையில் ரூ.1 கோடி மோசடி, காவல்துறையினர் விரைவான  நடவடிக்கை

Admin
0 0
Read Time2 Minute, 23 Second

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டா வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இராணிப்பேட்டை மாவட்டம் செங்கணாபுரத்தை சேர்ந்த ராஜசேகர் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

வாலாஜாபேட்டையில் உள்ள தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ராஜசேகர் பணியாற்றி வந்தார். அப்போது பட்டா மற்றும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பல்வேறு நபர்களிடமிருந்து பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்போதைய வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமனுடைய கையெழுத்தை ராஜசேகர் போலியாக போட்டு, பட்டா வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், பட்டா வாங்கியவர்கள் நிலத்தை பார்க்க சென்றபோது, தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.இதனை அறிந்த ராஜசேகர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜேந்திரன் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட இராணிப்பேட்டை காவல்துறையினர் தலைமறைவாக இருந்த வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ராஜேந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து, விசாரணையில், 35க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமானது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கிசான் முறைகேட்டில் விழுப்புரத்தை சேர்ந்த 7 ஒப்பந்த ஊழியர்கள் கைது

375 விழுப்புரம்:  தமிழக அளவில் சுமார் 14 மாவட்டங்களில் பிரதமர் கிஷான் திட்டத்தில் கூலி விவசாயிகள் பல ஆயிரக் கணக்கானோரை வேளாண்துறை அதிகாரிகள் அலுவலர்கள் துணையோடு சேர்க்கப்பட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami