“கிரண்பேடி போல வரவேண்டும்” பிரதமர் மோடிக்கு பதில் அளித்த தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி

Admin

ஐதராபாத்:  ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்த இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில், காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பிரதமர் மோடியுடன் தமிழக ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதி கலந்துரையாடினார். அப்போது கிரண் ஸ்ருதியிடம், ‛இன்ஜினியரிங் படித்து விட்டு காவல் அதிகாரியாக மாற ஏன் முடிவு செய்தீர்கள்?’ என பிரதமர் மோடி கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கிரண் ஸ்ருதி, ‛காவல் சீருடை அணிந்து மக்களுக்கு சேவையாற்ற பெற்றோர் விரும்பியதால், காவல்துறையை தேர்ந்தெடுத்தேன். கிரண்பேடி போலவே வரவேண்டும் என்பதற்காக தனக்கு கிரண் ஸ்ருதி என பெற்றோர் பெயர் வைத்தனர்.’ என்றார். அதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் மன அழுத்தம் இல்லாமல் பணி செய்ய வேண்டும் என்றும் மற்றும் யோகா செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்.

538 மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம் எழுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வசிமலையன் கோயில் ஒடை அருகே போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளும் பொழுது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452