சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 11 பேருக்கு வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்

Admin
0 0
Read Time2 Minute, 18 Second

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கடந்த 05.08.2020 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கோடிஸ்வரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரிகளான ராமகிருஷ்ணன் (வயது 27), முத்துக்காளை (வயது 24) மற்றும் பாலுக்குட்டி (வயது 26) ஆகிய மூன்று பேரையும் சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்தில் கைது செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. அய்யப்பன், உதவி ஆய்வாளர் திரு. அரிக்கண்ணன், கோவில்பட்டி உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ஸ்டீபன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய தலைமைக் காவலர்கள் திரு. முருகன், மற்றொரு திரு. முருகன், திரு. ஆனந்த் அமல்ராஜ், தனிப்பிரிவு திரு. ரமேஷ், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் திரு. ஸ்டீபன் இளையராஜா, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர்கள் திரு. முகம்மதுமைதீன், திரு. ஸ்ரீராம் ஆகியோரின் மெச்சத்தகுந்ந பணிக்காக,

காவல்துறை ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கினார்.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபர்கள் கைது.

785 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே பெட்டி கடையில் வைத்து அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த திருமுருகன் மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami