Read Time1 Minute, 7 Second
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம்¸ உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலை போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான சுரேஷ் என்பவரை விரைந்து கைது செய்தனர். மேலும் திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை முடிந்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு¸ குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதந்த¸ உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சாந்தி மற்றும் பெண் காவலர் திருமதி. பூர்ணிமா ஆகியேரை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல் இ.கா.ப அவர்கள் வெகுமதி வழங்கி அவர்களை பாராட்டினார்.