போலி மருத்துவர்களை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

Admin
Read Time1 Minute, 42 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலி மருத்துவர்கள் செயல்படுவதாக மாவட்ட அரசு மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவ இணை இயக்குனர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது கொடைரோடு அருகே மருத்துவம் பயிலாமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மதுரையைச் சேர்ந்த போலி மருத்துவர் கனகராஜ்(54) என்பவரை நிலைய ஆய்வாளர் திருமதி.லாவண்யா அவர்கள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதேபோல் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேடப்பட்டி பகுதியில் மருத்துவம் பயிலாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள்(49) என்பவரை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜேஸ்வரன் அவர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா
0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு 44 லட்சம் வழங்கிய சக காவலர்கள்

741 பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையம் கிராமத்தில் கிணற்றில் விழுந்த நபரை காப்பாற்ற முயற்சித்து வீர மரணம் அடைந்த தீயணைப்பு படை வீரர் திரு.ராஜ்குமார் அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami